ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்.!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறியை தவறாக பயன்படுத்தியதாக நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜோஹான் பெர்னாண்டோ, அவரது இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.