பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு.!
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பளை பகுதியில் நேற்று (12) 30 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
14 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி 105 இலட்சம் ரூபாவாகும்.
எனினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.