மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது.!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் (RMV) வாகனப் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பெண் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணகைளின் அடிப்படையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி, முறையான வதிவிடச் சான்றிதழ்கள் ஏதுமின்றி, GZ-6889 என்ற இலக்கத்தைக் கொண்ட காரொன்றை சட்டவிரோதமான முறையில் கைமாற்றுவதற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.