உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இந்திய துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி. தலைமையிலான குழுவினர் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0