உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நீதிபதியான முதல் மாற்றுத்திறனாளி பெண்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தான்யா,கேரளாவில் சிவில் நீதிபதியாகும் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்குரிய சாதனையை படைத்துள்ளார்.24 வயது தான்யா நாதன் பிறவியிலிருந்தே 100% பார்வை சவால் உடையவர்.2025ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நீதிபதி தேர்வு எழுதக்கூடிய உரிமையை உறுதிப்படுத்தியது.

முன்னர், நீதித்துறை சேவை தேர்வுகளில் பார்வையற்றோர் பங்குபெற தடை விதிக்கப்பட்டிருந்தது.“மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் எந்தவித பாகுபாடையும் எதிர்கொள்ளக் கூடாது” என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.அதனை தொடர்ந்து கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படிப்பில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று வழக்கறிஞராக அவர் பதவி ஏற்றார்.

படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் டிஜிட்டல் வடிவிலும் பிரெய்லி வடிவிலும் கிடைப்பதில்லை.எனவே, தேவையான குறிப்புகளை மாற்றி தயாராகும் இந்த வழிமுறை அதிக நேரத்தை எடுத்ததாக தான்யா கூறுகிறார்.“நான் எல்.எல்.பி. படிப்பை படிக்க முடியுமா என பலர் கேட்டனர் ஆனால், நான் அதில் கவனம் செலுத்தவில்லை” என தன்னம்பிக்கையும் உறுதியையும் வெளிப்படுத்தினார்.

நீதிமன்றங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக அணுகக்கூடியதாக மாற்றப்பட வேண்டும் என்றும், பழைய ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது மூலம் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் தான்யா வலியுறுத்துகிறார்.இளம் வயதில் பெரும் சாதனையை புரிந்து ,மாற்றுத்திறனாளிகளுக்கு இவர் முன் மாதிரியாக திகழ்கின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0