உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எதிரணியின் குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியே.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எவ்வித அடிப்படை ஆதாரமும் அற்றவை எனவும், அவை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை எனவும் அரசு பதிலடி கொடுத்துள்ளது.

‘தற்போதைய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மிகவும் மோசமான முறையில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், அவர் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகர், எப்போதும் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருகின்றார். ஆளுங்கட்சிக்குச் சார்பாக அவர் செயற்படுவதாகக் கூறுவது வடிகட்டிய பொய். நாடாளுமன்றத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சதிகளின் ஓர் அங்கமே இந்தத் தார்மீகக் குற்றச்சாட்டுகள்.

எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு செய்வதற்கு இந்நாட்டில் ஜனநாயக உரிமை உண்டு. அதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே ஒருவர் பதவி விலக வேண்டும் எனக் கோருவது வேடிக்கையானது. சபாநாயகர் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. சட்ட ரீதியான விசாரணைகள் எவை முன்னெடுக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள அவர் தயாராகவே உள்ளார்.

அரசமைப்புப் பேரவையின் தலைவராக சபாநாயகர் இருப்பதால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்பது தவறான வாதம். அந்தப் பேரவையில் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர் என்பதை மரிக்கார் போன்றோர் மறந்துவிடக் கூடாது. தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகச் சபாநாயகரின் பதவியைப் பறிக்க முயல்வதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

36 0 0