உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவு காணொளி பயன்பாடுக்கு சிக்கல்-புதிதாக நடைமுறைக்கு வரும் சட்டம்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்களுக்கான விதிகளை இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அண்மையில் மாற்றியமைத்துள்ளது.இணையப் பயன்பாட்டில் முறைகேடுகளைத் தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

புதிய விதிகளின்படி, அதிகாரிகளால் சட்டவிரோதம் என அடையாளம் காணப்பட்டு அகற்றக் கோரப்படும் உள்ளடக்கங்களை வெறும் 3 மணிநேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் நீக்கப்படும்.இதற்கு முன்னர் இந்த நடவடிக்கைக்கு 36 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இன்ஸ்டகிராம், டிக்டொக், பேஃஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் பதிவேற்றப்படும் “செயற்கையாக உருவாக்கப்பட்ட தகவல்களை” (Synthetically generated information) தெளிவாக அடையாளப்படுத்துவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாளங்கள் நிரந்தரமானவையாக இருக்க வேண்டும்.இவற்றை எக்காரணம் கொண்டும் மறைக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.அடையாளக் குறியீடு இன்றி இத்தகைய உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டால், அதற்கு அந்தந்த சமூக ஊடக தளங்களே பொறுப்பேற்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின் கீழ், குறிப்பிட்ட சில வகையான செயற்கை உள்ளடக்கங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

சுமார் ஒரு பில்லியன் இணையப் பயனாளர்களைக் கொண்ட இந்தியாவில், டீப்ஃபேக், ஆள்மாறாட்டம் மற்றும் போலியான உள்ளடக்கங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் மோசடிகள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0