உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (11) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய – அநுராதபுரம் வீதியில், கோன்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் நோக்கி சென்ற வேன், முக்சக்கரவண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நன்னேரியா பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய, வேன் சாரதி கைது செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில், இப்பன்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ளை நோக்கி சென்ற கெப்ரக வாகனமொன்று, எதிர்திசையில் வந்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்துடன் தொடர்புடைய கெப்ரக வாகனத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, உஸ்வத்த சுற்றுவட்ட வீதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை நோக்கிச் சென்ற உந்துருளி வீதியில் சென்ற பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த பாதசாரி லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொரட்டுவை பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

97 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

87 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0