அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு: உறவுகள் நீதிக்கோரிப் போராட்டம்.!
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன் உறவுகள் வீதியில் இறங்கி போராட்டம்; இறுதி கிரியை வட்டுக்கோட்டை சித்தங்கேணியில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி செலுத்திய வாகனத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உறவுகள், சடலத்துடன் வீதியில் இறங்கி நீதிக்கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10.02.2026 அன்று நடப்பு சம்பவத்தில் காயமடைந்து வட்டுக்கோட்டையை சேர்ந்த சிறுவன் அருள்பயஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் உயிரிழந்தார்.இந்நிலையில், சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இறுதி கிரியைக்கு பின்னர், உறவுகள் சடலத்துடன் வீதியில் “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினர்.தற்போது சிறுவனின் உடல் நவாலி இந்து மயானத்தில் புதைக்கப்படவுள்ளது.

