பொது இடங்களில் கழிவுகள் வீசுவோருக்கு கடுமையான எச்சரிக்கை: கூடுதல் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்.!
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் வீசப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றசெயற்பாடுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்ந்து அபராதம் விதிக்கும் பணிகள் நல்லூர் பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம், நல்லூர் பிரதேச சபையின் பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயல்கள் பெரும்பாலும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதில்மட்டும் போதாமல் சிலர் பொது இடங்களில் கழிவுகளை தொடர்ந்து வீசுவதை நிறுத்தவில்லை. எனவே, நல்லூர் பிரதேச சபை மேலும் பல கண்காணிப்பு கமராக்களை பொருத்தி, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டம் குறித்து முன்னெச்சரிக்கை அறிவித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார், “பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்களுடைய பொறுப்புணர்வை தவறவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, அவர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் எமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும்” என எச்சரித்தார்.