உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஐ.தே.க – ஐ.ம.ச மீண்டும் கை கோர்க்குமா? அரசியலில் புதிய மாற்றத்துக்கு வாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச) ஒன்றிணைந்தால் நாட்டில் வலுவான கூட்டு எதிரணியை உருவாக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:


“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கலந்துரையாடல்கள் சாதகமான திசையில் நகர்ந்து வருகின்றன. இதன் மூலம் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.”கட்சியின் அடிமட்ட நிலைமை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.


“கிராம மட்டங்களில் முன்பு பிளவுபட்டிருந்த ஆதரவாளர்கள் தற்போது தாமாகவே ஒன்றிணைந்து வருகின்றனர். தலைவர்களும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி, பொதுநலன் கருதி ஒன்றிணைய வேண்டும் என்பதே ஆதரவாளர்களின் விருப்பமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கைகோர்க்க ஏற்ற சூழல் உருவாகியுள்ளது.”
மேலும் அவர் கூறுகையில்,


“இரு தரப்பும் இணைந்த பின்னர், ஒரே அரசியல் நோக்கைக் கொண்டுள்ள மற்ற தரப்புகளையும் இணைத்து வலுவான பொது எதிரணியை அமைக்க முடியும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அது அவசியமாகிறது.” என வலியுறுத்தினார்.
நீண்டகாலமாகப் பிரிந்திருந்த இவ்விரு பிரதான அரசியல் கட்சிகளும்மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் அரங்கில் பெரும் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0