உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கி வருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த பல வருடங்களாக குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றியவர் பணி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதன் பிற்பாடு கடந்த ஒன்பது மாதங்களாக குறித்த பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் அதிபர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தாளையடி புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை ஆதர் ஜஸ்ரின் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் புதிய அதிபர் இதுவரை நியமிக்கப்படவில்லை.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி சிரமப்படும் தாளையடி றோ.க.த.க பாடசாலைக்கு விரைவாக புதிய அதிபரை அதிகாரிகள் நியமிக்கும்படி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0