உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தினார்.அங்கு அவர், அரச ஊழியர்களுக்கு திருப்திகரமான வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, டித்வா அனர்த்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, அந்த அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள்வதற்காக திறைசேரியிலிருந்து 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அதற்காக எவ்வித பணமும் கடனாகப் பெறப்படவில்லை எனவும், எவ்வித பணமும் அச்சிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.

அச்சந்தர்ப்பத்தில் திறைசேரியின் கணக்கில் 120,000 கோடி ரூபாய் இருந்ததாகவும், எனவே இந்த 50,000 கோடி ரூபாவை ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.டித்வா அனர்த்தத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என உலக வங்கி கணிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 4% எனவும், அரசாங்கம் முன்னெடுத்த வலுவான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பிலிருந்து மீள முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

86 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0