வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் பணிகளை ஆய்வு செய்ய கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு நீர் வழங்கல் அமைச்சர் விஜயம்.!
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ இன்று கிளிநொச்சியைச் சந்தித்து பல முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை நேரடியாக ஆய்வு செய்தார்.அவர் கிளிநொச்சி இரணைமடுக்குளம் குளத்தை பார்வையிட்டு நிலவரம் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், காக்கா கடைச்சந்தியில் உள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து, அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா வீடமைப்பு திட்டங்களை விவேகானந்த நகர் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தார்.