ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு தமிழரசுக் கட்சியுடன் கொழும்பில் சந்திப்பு.!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதுக் குழு இன்று கொழும்பில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து அரசியல் விவாதம் நடத்தியுள்ளது.தமிழரசுக் கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் கலந்துகொண்ட சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டம், நீண்டகால தாமதமடைந்த மாகாண சபைத் தேர்தல், மேலும் சர்வதேச அழுத்தம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
தமிழரசுக் கட்சி தரப்பில், ஜனநாயகத்தை உறுதி செய்யவும், மாகாண சபைத் தேர்தலை உரிய முறையில் விரைந்து நடத்தவும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழுத்தம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஐரோப்பிய தூதுக் குழு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகளை மேற்கொண்டுவரும் நிலையில், தமிழரசுக் கட்சியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.