உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சாமிமலை ஓல்ட் டன் தோட்ட சாலை அவல நிலை – மக்கள் கடும் அவதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை ஓல்ட் டன் தோட்டத்தின் மின்னா பிரிவிற்கு செல்லும் சுமார் 2.5 கிலோமீட்டர் நீளமான சாலை பல தசாப்தங்களாக சீரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

வாக்காளர்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோர் தமது அன்றாட தேவைகளுக்காக சாமிமலை மற்றும் மஸ்கெலியா நகரங்களுக்கு, அதேபோல் பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்ல இச்சாலையையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.சாலை மோசமான நிலையில் இருப்பதால், கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் இதனால் பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சில கர்ப்பிணி தாய்மார்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பெற்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இதனால் தாயும் குழந்தையும் உயிர் ஆபத்தில் சிக்கிய தருணங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த சாலையை சீரமைத்து தருமாறு பல முறை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, மலையக மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தாலும், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என ஓல்ட் டன் தோட்ட மின்னா பிரிவு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தருமாறு தற்போதைய அரசாங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் ஆகியோரிடம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

85 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0