உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூடு: “நீதியான விசாரணை அவசியம்” – கஜேந்திரகுமார் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களே விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலைமை நாட்டில் காணப்படுகின்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், போரற்ற சூழலில் ஜனாதிபதி யாழ்ப்பாண வீதிகளில் சுதந்திரமாகச் செல்வதற்கான நிலைமை காணப்படும் வேளையில், வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை நியாயப்படுத்த முடியாது என கூறினார்.வாகனத்தை நிறுத்துமாறு கட்டளையிட்ட பின்னரும் அது மீறிச் சென்றால், வாகனத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையே பொலிஸார் மேற்கொள்ள வேண்டுமே தவிர சாரதியை சுட்டுக் கொல்ல முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.


மேலும், சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட வாகனத்தில் மாட்டுச் சாணம் இருந்ததாக பொலிஸார் காட்டிய விதம் சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததாகவும், வாகனத்திலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பையில் சாணம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


இச்சம்பவம் தொடர்பில் நீதியான, வெளிப்படையான விசாரணைகள் நடைபெறுமா என்பது சந்தேகத்திற்குரியது என அவர் தெரிவித்தார்.நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலில் உள்ள சூழலில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களே இத்தகைய சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன என்றும், கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


ஒருவர் குற்றவாளி என்றாலும், பொலிஸார் துப்பாக்கிச்சூட்டின் மூலம் உயிரிழக்கச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறிய அவர், சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம் என வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

56 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

96 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

85 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0