உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மின் கம்பத்துடன் மோதிய இரு சக்கர வாகனம்; அதிவேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்து நிர்மால் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நேற்று இரவு பாணந்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த அவர், கொரலவெல்ல லன்சியா தேவாலயத்திற்கு அருகில் சிறிய ரக லொறி ஒன்றை முந்திச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த வேளையில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.


கடுமையாக காயமடைந்த இளைஞர் உடனடியாக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

55 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

95 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

85 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0