யாழில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று(11) ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி சென்ற யாழ். ராணி தொடருந்தில் மோதியே வயோதிபர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.