போராட்டத்தில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி.!
கவரவலை தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 8 பேரும் தாங்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாளில் இருந்து வேதனத்துடன் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கடந்த 5 ஆம் திகதி முதல் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் அவர்கள் நேற்று காலை முதல் உணவு தவிர்த்து உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் இன்று காலை 10 மணிக்கு மயக்கம் முற்ற நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஒருவர் 10.45 மணிக்கு மயக்கம் முற்ற நிலையில் 1990 நோயாளிகள் காவு வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.