உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கக் கோருவது ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

ஜனாதிபதியின் சேவைகளையும் ஊழல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான அவரது வேலைத்திட்டங்களையும் பாராட்டி வரவேற்கிறோம். அதேநேரம் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் ஜனாதிபதியின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர்களின் கூற்றுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேற்று (10) இடம்பெற்ற மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள்.

அவர் மேலும் பேசுகையில்,
மலையக மக்களுக்கு பிரஜாவுரிமை பெற்றுக் கொடுத்த பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சையின் ஊடாக சிறந்த சேவையாற்றியதோடு, இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார். எனவேதான் அவரது உருவப்படம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை நிறுவப்பட்டு தேசிய ரீதியில் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

அவரது சேவைகளைத் தெரிந்து கொள்ளாமல் நேற்று அரசியலுக்கு வந்த சிலர், முக்கிய நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள அவரது பெயரை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஜனாதிபதியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மலையக மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள காரணமாக அமைந்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

கொட்டகலை பிரதேச சபை வருடந்தோறும் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகளை வழங்கி வருவது போல அடுத்த மாதம் 8 ஆந் திகதி மகளிர் தினத்தன்று 12 இலட்ச ரூபா செலவில் 400 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாணத்தின் 300 மில்லியன் ரூபா வேலைத்திட்டத்தில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் சுப்பர் மார்க்கெட் அமைத்து சபைக்கு வருமானத்தை தேடிக்கொள்ளும் பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல், பிரதேச சபையின் பழைமை வாய்ந்த விடுதிகளை அகற்றி அந்த இடத்திலும் சந்தைக் கட்டடத்தை அமைக்க உறுப்பினர்களின் அனுமதியைக் கோரியுள்ளோம். பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு வரியைப் பெற்றுக் கொள்வதற்காக ஆளுநரின் அனுமதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எமது உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் கோரிக்கைக்கு அமைய, கொட்டகலை நகரில் பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலைகளில் இடம்பெற்று வரும் இடையூறுகள் தொடர்பாக பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி, கலால் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரின் கலந்துரையாடலை எனது தலைமையில் நடத்தி அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திர தினத்தை வெறுமனே தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவதோடு நின்று விடாமல், பிரதேசத்தின் முக்கியமான பகுதிகளில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டு ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

46 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0