உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரச வெசாக் பண்டிகை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

மே மாதம் 01 ஆம் திகதி ‘விசா’ நட்சத்திரம் இல்லாத காரணத்தினால், அந்தத் தினத்தை வெசாக் போயா தினமாக அறிவிப்பது உகந்ததல்ல எனத் திரைனிக்காய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய மே 30 ஆம் திகதி வெசாக் தினமாகத் தீர்மானிக்கப்பட்டதாக, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

46 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0