உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய திருப்பம்.!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
56 பார்வைகள்

இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட உண்மைத் தாளில் (Fact Sheet) சில முக்கிய வார்த்தைகள் மற்றும் விதிமுறைகள் அமைதியாகத் திருத்தப்பட்டுள்ளன.ஒரு நாள் முன்னர் வெளியிடப்பட்ட ஆரம்ப பதிப்பில், இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்க “உறுதியளித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் தற்போது காணப்படும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில், இந்தியா மேலும் அமெரிக்கப் பொருட்களை “வாங்க விரும்புகிறது” அல்லது “உத்தேசித்துள்ளது” என மென்மையான சொல்லாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் உறுதிப்பாட்டின் தன்மை நுட்பமாக மாற்றப்பட்டுள்ளதாக கவனிக்கப்படுகிறது.செவ்வாய்க்கிழமை (10) வெளியிடப்பட்ட இந்த உண்மைத் தாள், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக கட்டமைப்பின் முக்கிய அம்சங்களை விளக்கியது. அதில், அனைத்து அமெரிக்க தொழில்துறை பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆரம்ப பதிப்பில், “இந்தியா 500 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை வாங்க உறுதியளித்துள்ளது” என்று கூறப்பட்டது.ஆனால் திருத்தப்பட்ட பதிப்பில், “விவசாயம்” என்ற சொல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், இந்தியா மேலும் அமெரிக்கப் பொருட்களை வாங்க “உத்தேசித்துள்ளது” என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கட்டணக் குறைப்புகள் தொடர்பான பகுதியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முந்தைய பதிப்பில், உலர்ந்த டிஸ்டில்லர் தானியங்கள், சிவப்பு சோளம், பருப்புகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சில பருப்பு வகைகள், சோயாபீன் எண்ணெய், ஒயின் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பல அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் அல்லது நீக்கும் என கூறப்பட்டது.


ஆனால், திருத்தப்பட்ட ஆவணத்தில் “சில பருப்பு வகைகள்” என்ற குறிப்பு நீக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் வர்த்தகப் பிரிவிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இடம்பெற்றுள்ளது.ஆரம்ப தகவல் தாளில், “இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும்” என்றும், “பாரபட்சமான அல்லது சுமையான நடைமுறைகளை நீக்க வலுவான இருதரப்பு டிஜிட்டல் வர்த்தக விதிகளை பேச்சுவார்த்தை நடத்த உறுதிபூண்டுள்ளது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் இந்தியா டிஜிட்டல் சேவை வரிகளை நீக்கும் என்ற பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. தற்போது, “வலுவான இருதரப்பு டிஜிட்டல் வர்த்தக விதிகளைப் பேச்சுவார்த்தை நடத்த உறுதிபூண்டுள்ளது” என்ற குறிப்பே மட்டும் இடம்பெற்றுள்ளது.இந்த மாற்றங்கள், ஒப்பந்தத்தின் சொல் நடை மற்றும் உறுதிப்பாட்டு நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

43 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

40 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

27 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

44 0 0