உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்; 6 மாத கால அவகாசம் தருகிறோம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது. அவர்கள் நினைத்தால் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும். அரசுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்குகின்றோம், முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது. அரசின் இயலாமையும் பலவீனமும் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும், சகல கூட்டுறவுத் தேர்தல்களிலும் அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் மக்கள் அரசின் மீது கொண்டுள்ள வெறுப்பு தெளிவாகப் புலனாகின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஆறு மாத கால அவகாசத்தை வழங்குகின்றோம். அரசிடம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருப்பதால், வரும் வாரமே ஒரு பிரேரணையை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து சட்டச் சிக்கல்களை நீக்கித் தேர்தலை நடத்த முடியும். ஆனால், தேர்தலைச் சந்திக்க அரசுக்குத் துணிவில்லை.

இந்த அரசால் நாட்டைச் சரியான முறையில் நிர்வகிக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எம்மிடம் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த தரப்பினர் உள்ளனர். அதிகாரத்தை எம்மிடம் ஒப்படைத்தால் நாட்டைச் சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெறுவது உறுதி.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

46 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

35 0 0