உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபா முடங்கும் அபாயம் ; ரஷ்யா எச்சரிக்கை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
41 பார்வைகள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது.இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது.

இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார்.மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பள்ளி மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது.அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ஐ.நா., பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0