வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி நம்பிக்கை – கந்தசாமி பிரபு தெரிவிப்பு.!
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு நம்பிக்கையையும் நல்ல பாசத்தையும் கொண்டிருப்பதால், பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலங்களில் இனப்பரம்பலை மாற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் நடைபெற்றபோதிலும், தமது ஆட்சிக்காலத்தில் அவ்வாறான செயல்பாடுகள் நடக்காது என்றும் அவர் வெல்லாவெளியில் ஊடகங்களுக்கு கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.