உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மன்னாரில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் -பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு இன்று (10) மாலை அமைச்சர் பிமல் ரத்நாயக்கா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.


கூட்டத்தில் மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி உள்ளிட்ட ஐந்து உள்ளூராட்சி பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள், வீதிகள் புனர்நிர்மாணம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் ஆராயப்பட்டன.சிறப்பாக, முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


முன்னெடுக்கப்பட்ட ஆலோசனைகள் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் தொடரப்படவுள்ளதாகவும், அரசியல் மற்றும் நிர்வாக தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0