உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுத் திட்டம்:ஜனாதிபதி தலைமையில் நாளை நுவரெலியாவில்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வு நுவரெலியா நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் விரிவான விழிப்புணர்வு செயற்பாடுகளின் மூலம் மக்களைப் போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்து, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


மேலும், போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு சிறப்பான பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெறவுள்ளது.மத்திய மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் முக்கிய முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0