பல அரச நிறுவனங்களின் பதவிகளில் அதிரடி மாற்றம்! விரைவில் புதிய நியமனங்கள்.!
பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்ற அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
அரச நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், புதிய நியமனங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கைகள் அமையவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.