உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து மீன் வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.இதன் விளைவாக மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதற்கமைய, இன்று பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் 3,600 ரூபாவுக்கும், பாறை மீன் 3,000 ரூபாவுக்கும், கெலவல்லா மீன் 2,700 ரூபாவுக்கும், பலயா மீன் 2,000 ரூபாவுக்கும் மற்றும் லின்னா மீன் 900 ரூபாவுக்கும் மற்றும் சாளையா மீன் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.கடற்றொழிலாளர்களின் இந்தப் போராட்டம் மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

78 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0