உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தமிழரசுக் கட்சிக்குள் நடப்பது மிகவும் கேவலம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினை மிகக் கேவலமாக உள்ளது. இனியும் திருந்தாவிட்டால் மக்கள் முன் செல்ல முடியாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

“நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதைக் கூட இனிப்பு வழங்கி, பெனர் கட்டி கொண்டாடுகின்றனர். எமது மண்ணில் இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கு எதிராக மிகப்பெரிய உளவியல் போர் தொடுக்கப்படுகின்றது. இந்த உளவியல் போரால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறினார்கள்.

என்.பி.பி. மீது தமிழ் மக்கள் காதல்கொண்டு வாக்களிக்கவில்லை.

எமது கட்சி மீது இருந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அது. இது தமிழ் மக்கள் எமக்கு வழங்கிய தண்டனையாகும். இனியும் திருந்தாவிட்டால் மக்கள் முன் செல்ல முடியாது.

அதேவேளை, சிறீதரன் யாரென்பது தமிழ் மக்களுக்கு தெரியும். நாட்டை விட்டு ஓடியவன் கிடையாது. பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் இங்குதான் உள்ளனர்.

எனக்குப் பதவி முக்கியம் அல்ல. நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்காக நான் அடிபடப்போவதில்லை. ஜனநாயக முறையிலேயே பதவிக்கு வந்தேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0