உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் கொடூரமானது புதிய சட்ட வரைவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் பெயரிலான புதிய சட்ட வரைவு ஒன்றை அநுர அரசு முன்மொழிந்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் போராட்டங்கள் மூலம் பதவியிறக்கப்பட்ட போது, போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் மீண்டும் அத்தகைய மக்கள் எழுச்சிகள் உருவாகாமல் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு, பழைய சட்டத்தை விடவும் மிக மோசமான சரத்துக்களுடன் இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்படுகின்றது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1979 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது வெறும் 6 மாத காலத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடாகும். ஆனால், 1982 இல் அது ஒரு நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது.

ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், போர் முடிந்த பின்னரும் நீக்கப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக உள்ளது.

இதன் காரணமாகவே அரசு பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர முயல்கின்றது.

ஆனால், இந்தப் புதிய வரைவு பழைய சட்டத்தை விடப் பல மடங்கு கொடூரமானது.

புதிய சட்ட வரைவு மிகவும் மோசமாக இருப்பதால், மக்கள் அனைவரும் அதனை எதிர்த்துப் போராடுவார்கள். அந்த எதிர்ப்பின் விளைவாக அரசு புதிய வரைவை வாபஸ் பெற்றால், தானாகவே பழைய ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ நடைமுறையில் நீடிக்கும்.

பழைய சட்டத்தைத் தந்திரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசு இவ்வளவு மோசமான புதிய வரைவை முன்மொழிந்துள்ளதோ என்ற பலமான சந்தேகம் எழுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0