உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டு பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, சுமார் 4 அடி நீளமான அரிய வகை மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இன்று காலை தோட்டத் தொழிலாளி ஒருவர் இதனைக் கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுத்தையின் உடல் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத வேட்டையாடல் முறைகளால் எமது நாட்டின் அரிய வகை உயிரினங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வலையிட்ட நபரைக் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் குறித்து நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உத்தரவின் பேரில் உடற்கூற்று பரிசோதனை செய்ய ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது என நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

77 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0