சீனாவில் உலகின் முதல் கடல் காற்றாலை!
உலகின் முதல் 20 மெகாவாட் திறன் கொண்ட கடல் காற்றாலை விசையாழியை சீனா வெற்றிகரமாக இயக்கத் தொடங்கியுள்ளது.
புஜியான் மாகாணக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய காற்றாலை, தற்போது சீனாவின் தேசிய மின்சார வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த விசையாழி ஆண்டுதோறும் சுமார் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 44,000 வீடுகளின் வருடாந்திர மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என சீனா த்ரீ கோர்ஜஸ் (CTG) நிறுவனம் ஜனவரி 14ஆம் திகதி அறிவித்துள்ளது.
கடலில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த விசையாழியின் மொத்த உயரம் 174 மீட்டர் ஆகும். இது சுமார் 58 மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு இணையானதாகும்.