உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உயர் இரத்த அழுத்த மருந்து அவசரமாக திரும்பப்பெறல் – கனடாவில் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து தொடர்பாக ஏற்பட்ட உற்பத்தி சிக்கலின் காரணமாக நாடு முழுவதும் அவசர திரும்பப்பெறல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.கனடிய சுகாதார திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, மார்-அம்லோடிபின் 5 மில்லிகிராம் மாத்திரைகளின் இரண்டு தொகுதிகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. சில மருந்து பாட்டில்களில் தவறான மாத்திரைகள் நிரப்பப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, மார்-அம்லோடிபின் 5 மில்லிகிராம் மாத்திரைகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மார்பு வலி சிகிச்சைக்காக வழங்கப்படுகின்றன. எனினும், உற்பத்தியாளர் மார்கன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தவறினால், குறைந்த இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் மிடோட்ரின் 2.5 மில்லிகிராம் மாத்திரைகள் சில பாட்டில்களில் தவறுதலாக நிரப்பப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரியான மார்-அம்லோடிபின் 5 மில்லிகிராம் மாத்திரைகள் எட்டு பக்க வடிவில் காணப்படும். அவை வெள்ளை அல்லது ஓரளவு வெண்மை நிறத்தில் இருந்து, “210” மற்றும் “5” என்ற எண்கள் அச்சிடப்பட்டிருக்கும்.தவறுதலாக நிரப்பப்பட்டிருக்கக்கூடிய மிடோட்ரின் 2.5 மில்லிகிராம் மாத்திரைகள் வட்ட வடிவில் காணப்படும். அவற்றில் “M2” என்ற குறியீடு பொறிக்கப்பட்டிருக்கும்.


உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகள் தவறுதலாக மிடோட்ரின் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், ஆபத்தான அளவில் இரத்த அழுத்தம் அதிகரித்தல், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் உடல் உறுப்புகள் சேதமடையும் அபாயம் ஏற்படலாம் என கனடிய சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0