உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் பதவி விலகல்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகள் பிரித்தானிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மரின் நெருக்கமான அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவி விலகி வருவது அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது.


அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பு நிர்வாகப் பணிப்பாளராக இருந்த டிம் ஆலன் நேற்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். புதிய குழுவை உருவாக்குவதற்கான வழிவிடும் நோக்கில் தாம் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக, பிரதமரின் பிரதான பணிக்குழாம் தலைவராக இருந்த மோர்கன் மெக்ஸ்வீனோவும் நேற்று பதவி விலகியிருந்தார்.

தொழிலாளர் கட்சியின் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர், எப்ஸ்டீன் விவகாரத்தில் சர்ச்சைக்கு உள்ளான பீட்டர் மண்டெல்சனை அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்க பரிந்துரைத்ததற்குப் பொறுப்பேற்று விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரான பீட்டர் மண்டெல்சன், ஜெப்ரி எப்ஸ்டீனுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அண்மையில் வெளியான ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது வணிக அமைச்சராக இருந்த அவர், ரகசிய அரசாங்கத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்தச் சர்ச்சையையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் மண்டெல்சன் தூதுவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தவறான நபரை முக்கிய இராஜதந்திர பதவிக்குத் தேர்வு செய்தமைக்காக பிரதமர் கீர் ஸ்டார்மர் ஏற்கனவே மன்னிப்பு கோரியிருந்தார்.


இந்நிலையில், அவரது தலைமைத் திறன் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தொடர்ச்சியான ஆலோசகர் விலகல்கள், ஸ்டார்மரின் 18 மாத ஆட்சிக்காலத்தில் உருவான மிகப் பெரிய அரசியல் நெருக்கடியாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0