உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு வருகை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.அதன்படி, பெப்ரவரி 11 ஆம் திகதி தெவ்னிமோரி புனித சின்னங்களை இந்தத் தூதுக்குழு இந்தியாவுக்கு கொண்டு செல்லவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் தெவ்னிமோரி புனித சின்னங்கள் பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 24 மணி நேரமும் புனித சின்னங்களை வழிபட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், முதன்முறையாக, இலங்கை மக்கள் இந்தப் புனிதச்சின்னங்களைத் தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது சிறப்புக்குரியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0