உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் நெருக்கடி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக, இலங்கை தனது தேயிலைக்கான சர்வதேச சந்தைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் லுஷாந்த டி சில்வா எச்சரித்துள்ளார்.

சூறாவளி காரணமாக சுமார் ஒரு மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய தேயிலைத் தேவையை ஈடுசெய்வதில் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது.


இலங்கையின் விநியோகம் குறையும் பட்சத்தில், சர்வதேச கொள்வனவாளர்கள் ஏனைய நாடுகளை (இந்தியா, கென்யா போன்றவை) நாடும் அபாயம் உள்ளது.கடந்த 15-20 ஆண்டுகளில் பாகிஸ்தான், எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியாளராக இலங்கை இருந்தபோதிலும், தற்போது அந்த சந்தைகளை ஓரளவு இழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சவால்கள் நிலவினாலும், இலங்கை தொடர்ந்தும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்து வருகின்றது.
இவற்றில் ரஷ்யா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் தொடர்ந்தும் முன்னணியில் உள்ளன.

2024 ஆம் ஆண்டில் 245.7 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதிஇ 2025 இல் 257.44 மில்லியன் கிலோவாக (11.65 மில்லியன் கிலோ உயர்வு) அதிகரித்துள்ளது.

சீன சந்தை இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக உருவெடுத்து வருவதாக லுஷாந்த டி சில்வா தெரிவித்தார்.
சீனா ஒரு மிகப்பெரிய சந்தை. அங்குள்ள 1.4 பில்லியன் மக்களில் வெறும் 5 வீத பங்கினை நாம் பெற்றுக்கொண்டாலும், அது இலங்கைத் தேயிலைத் துறைக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என அவர் விளக்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0