உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதிய அரசமைப்பு வெறும் கனவு: விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது தேசிய மக்கள் சக்தி அரசின் புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் எடுக்காததைக் கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.இவர் கூறியதாவது:


“தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்தில் புதிய அரசமைப்பு உருவாகும் என்பது வெறும் கனவு மாத்திரம். தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியில் நான்கு மாதங்கள் கடந்தும், புதிய அரசமைப்பை உருவாக்க ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை.ஒரு அரசு புதிய அரசமைப்பை கொண்டு வர விரும்பினால், முதலில் ஆரம்ப கட்ட பணிகளைச் செய்ய வேண்டும்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இது வெறும் கனவு என்பதை நான் கூறுகிறேன்.”
அரசியல் வட்டாரங்களில் இதனால் விவாதங்கள் எழுந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசின் தேர்தல் வாக்குறுதியில் புதிய அரசமைப்பை உருவாக்கும் திட்டமும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் முன்வைப்பதாக கூறப்பட்டிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

45 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

86 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

76 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0