ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள ‘ரடம எகட’ தேசிய இயக்கத்தின் தொடக்க விழா.!
விஷப் போதைப்பொருள் பேரழிவை தோற்கடிக்கும் ‘ரடம எகட’ தேசிய இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட தொடக்க விழா ஜனாதிபதியின் தலைமையில் ஜனவரி 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மத தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 5000 பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை ஒன்றிணைத்து எதிர்கால தலைமுறையை பாதுகாப்பதே இந் நிகழ்வின் பிரதான நோக்கம் என்றும் அவர் கூறினார்.
போதைப்பொருளை அடியோடு ஒழிக்கும் ‘ரடம எகட’ தேசிய இயக்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாக்க சபையை அமைக்கும் நிகழ்ச்சியில் (06) கலந்து கொண்டு அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட செயலாக்க சபையின் தலைவராக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி அவர்கள் பதவியினால் நியமிக்கப்பட்டார்.
அதேபோல், சபையின் செயலாளராக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்கள் பதவியில் நியமிக்கப்பட்டார்.
நுவரெலியா மாவட்டத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மகா சங்கரத்தினர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது கருத்துகளை இந்நிகழ்வில் முன்வைத்தனர்.



