உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

யாழ். நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை நேற்று ஞாயிற்றுக்கிழமை துப்பரவு செய்த வேளை, துப்பரவுப் பணியாளர்கள் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்றை அவதானித்தனர்.

அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர்.

அதனுள் கைக்குண்டு, கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டன.

பொதியினுள் உள்ள வெடிபொருள்கள் தொடர்பில் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0