ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!
களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால்பெட்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.