உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மலையக கல்வி அகத்தின் இலவச மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

ஹட்டன் குடாகம பகுதியில் அமைந்துள்ள “மலையக கல்வி அகம்” ( Upcountry Education Hub ) பிரதேச மக்களின் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச மருத்துவ முகாமை நேற்று ஞாயிறுக்கிழமை (8) கல்வி அகத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் 200 க்கும் அதிகமானோர் பங்குபற்றி பயனடந்ததோடு இந்த நிலையத்தில் இடம்பெறும் பாடநெறிகள், தொழிற்பயிற்சிகள் சம்பந்தமான விளக்கத்தையும் பெற்றுக் கொண்டதாக மலையக கல்வி அகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் தெரிவித்தார்,

நேற்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற மருத்துவ முகாமில் தொற்றாநோய்களை அடையாளப்படுத்தல், ஆரம்ப நிலையில் உள்ள நோய்களைக் கண்டறிதல், இளையோருக்கான உடல்நல வழிகாட்டல், மற்றும் இரத்த அழுத்தம், சர்க்கரை, ஈ.ஸி.ஜி. முதலான பரிசோதனைகள் இடம்பெற்றன.

டிக்கோயா ஆதார வைத்தியசாலை மருத்துவ வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் மற்றும் கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலை வைத்தியக் குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல், உணவு மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம், தாதியர் பயிற்சிநெறி, அழகுக்கலை மற்றும் சிகையலங்காரம், கொரிய மொழிப் பயிற்சி, முன்பள்ளிக் கல்வி முதலான பாடநெறிகள் உள்ளன. இளைஞர், யுவதிகள் ஒரு தொழிலுக்குச் செல்வதற்கு முன்னர் அது தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும்.

அத்தோடு எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தமது உடல் உபாதைகள், நோய்கள் பற்றிய அறிவைப் பெற்றுக் கொண்டால், சுகதேகிகளாக வாழ முடியும் என்பதற்கு உதவும் வகையில் ஒரு நாள் இலவச மருத்துவ முகாமை நடத்தியுள்ளோம். இதன் தேவை உணரப்பட்டுள்ளதை பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டதில் அவதானிக்க முடிந்தது. எனவே, எதிர்காலத்தில் இன்னும் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இன்றைய தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த உலகத்தில் கணணி கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இது தவிர, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கற்கை நெறிகளே நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எமது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பலர் ஹோட்டல்கள், வைத்தியசாலைகள், அழகுக்கலை நிலையங்கள் முதலானவற்றில் தொழில் வாய்ப்புகளைப் பெற்று பெருமளவு வருமானத்தை ஈட்டி வருகின்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

எமது நிலையத்தின் பாடநெறி இணைப்பாளர் எஸ். விஜேசிங் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாம் சிறப்பாக இடம்பெறுவதற்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ். சரவணன் தலைமையில் அனுசரணை வழங்கிய யாழ். பல்கலைக்கழக இந்துசமய பீடத் தலைவரும், முன்னேஸ்வரம் சிவன் கோவில் தர்மகர்த்தாவுமான பத்மநாதன், தொழிலதிபர் பத்மராஜ் உட்பட வைத்திய குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0