உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கனடாவில் வாகனம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

ஒன்டாரியோ மாகாணத்தின் பாரி நகரில் அமைந்துள்ள ரோயல் விக்டோரியா மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் ஜி.பி.எஸ். கண்காணிப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரி காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது கைப்பேசிகளில் கிடைத்த எச்சரிக்கை அறிவிப்பின் மூலம், வாகனத்துக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான கண்காணிப்பு சாதனம் இருப்பதை அறிந்துள்ளனர். வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கண்காணிப்பு சாதனம் மிக அருகில் இருப்பதாக கைப்பேசி அறிவிப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வாகனத்தை முழுமையாகச் சோதித்தபோது, அதில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த டிராக்கர் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என பாரி காவல்துறையின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்துறை அதிகாரி கிரிஸ்டைன் போஹ்லர் தெரிவித்துள்ளார்.வாகனங்களில் இவ்வாறான சாதனங்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றாலும், அவற்றை மறைத்து பொருத்துவது கடினமான செயல் அல்ல என வாகன தொழில்நுட்ப நிபுணர் ஸ்டீவ் மேடர் தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் முன் அல்லது பின்புற சக்கர வளைவு பகுதிகளில், குறிப்பாக உலோகத்தால் ஆன பகுதிகளில் காந்தத்தின் உதவியுடன் இச்சாதனங்களை எளிதில் பொருத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சமீபகாலமாக புதிய மாடல் வாகனங்கள் அதிகமாக குறிவைக்கப்படுகின்றன என காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இச்சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாகனங்களும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய மாடல்கள் எனவும், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாகனங்களை நீண்ட காலம் பயன்படுத்தாமல் வைத்திருக்க வேண்டிய சூழலில், அவற்றை பாதுகாப்பான கராஜ்களில் நிறுத்துமாறும், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது கடைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றிருந்தாலும், இதுபோன்ற கண்காணிப்பு சாதனங்கள் நகரம் முழுவதும் மற்றும் மாகாணத்தின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0