உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்; சரியான பாதைக்கான முக்கிய நகர்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்துக்குள் இருந்தே கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது சரியான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்தி அரசமைப்புப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நகர்வாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த வாரம் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூடிய அரசமைப்புப் பேரவை, தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இந்நியமனம் குறித்தும், அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக சிவில் சமூகத்தின் சார்பில் புதிதாக மூவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மிகக் காத்திரமான தற்போதைய சூழ்நிலையில் அரசமைப்புப் பேரவையின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு எமது வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். அதேவேளை தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்துக்குள் இருந்தே கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட்டிருப்பது சரியான பாதையில் பயணிப்பதற்கான முக்கிய நகர்வாகும்.

அதேவேளை, அரசமைப்பின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையானது சமநிலையான ஆட்சியியல் நிர்வாகத்தின் அடிப்படைத் தூணாகும். அதன்படி வெவ்வேறு அரசுகளின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது நிலைப்பாடுகள் மற்றும் அரசமைப்புசார் கோட்பாடுகளில் உறுதியாக நின்று, தற்போது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லும் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

44 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

85 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

74 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

34 0 0