உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவது தொடர்பில் வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது சுமார் 4 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளது.

இந்த புதிய உற்பத்தி நடவடிக்கைகள் சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னைய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து, இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதன் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டினால், வாகன உரிமையாளர்கள் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் அதுவரை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலுவையில் உள்ள பெருமளவிலான இலக்கத் தகடுகளை விரைவாக அச்சிட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

43 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

84 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0