வொஷிங்டன் போஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி பணிநீக்கம்.!
அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது விளையாட்டு மற்றும் புத்தக விமர்சனப் பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்களில் 300க்கும் மேற்பட்டோர் கடந்த வியாழக்கிழமை திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல கிளைகளையும் நாளிதழ் மூடிவிட்டது.இந்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாஷிங்டன் போஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.