ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை கொ*லை செய்ய முயற்சி.!
தென்னிலங்கையில் அரசியல்வாதியை ஒருவரை கொலை செய்ய நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பந்துல பிரசன்ன என்பவர் மீதே நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போதும், இலக்கு தவறியமையால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும் வெற்று தோட்டா ஒன்றும், கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.