உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்திய வரைபடத்தை மாற்றிய அமெரிக்கா.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இந்தியா–அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதனை விளக்கும் கூட்டறிக்கையை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விளக்கப்படத்தில் இடம்பெற்ற இந்தியாவின் வரைபடம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


குறித்த வரைபடத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சய் சின் பகுதியும், பாகிஸ்தானின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜம்மு–காஷ்மீர் முழுப் பகுதிகளும் இந்திய நிலப்பரப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விளக்கப்படம், இந்தியா வரிக்குறைப்பு செய்ய உள்ள பொருட்களின் பட்டியலுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் இடம்பெற்றுள்ள வரைபடம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஜம்மு–காஷ்மீர் விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவ தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்டோர் அமெரிக்காவின் ஆதரவைப் பெற பலமுறை வொஷிங்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். மேலும், காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச அரங்கில் முன்வைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையிலேயே, அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புதிய வரைபடம், இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் அரசியல் சமிக்ஞையாக இருக்கக்கூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

24 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0