உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஆட்சியை தக்கவைக்க சூழ்ச்சி செய்யமாட்டோம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“சூழ்ச்சி மூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்குக் கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” – என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தனது இந்திய விஜயத்துக்கு முன்னதாக அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனைச் செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஆசியுடன் ஆட்சியைத் தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்குச் சூழ்ச்சி செய்ய மாட்டோம்.

அதிகாரத்தை நாம் மோசடிக்காகப் பயன்படுத்தவில்லை. நாட்டுக்காகவே பயன்படுத்துகின்றோம். நாட்டுக்குச் சேவை செய்த திருப்தியுடன் மரணிக்க வேண்டும். அது போதும்.

மக்களின் ஆசியுடன் எமது ஆட்சி தொடரும். நாட்டை நாம்
கட்டியெழுப்புவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

43 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

84 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

73 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

33 0 0